
கிள்ளான், நவம்பர்-2,
கடந்த வாரம் கிள்ளான் வட்டாரத்தில் 2 இரண்டு சட்டவிரோத கிடங்குகள் மற்றும் 4 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், RM6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பதிவுச் செய்யப்படாத மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலாங்கூர் சுகாதாரத் துறையின் மருந்தக அமுலாக்கப் பிரிவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு மற்றும் KKM மருந்தக அமுலாக்கப் பிரிவுடன் இணைந்து இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக, சுகாதார அமைச்சு கூறியது.
அந்த 6 ஆறு இடங்களிலும், உள்ளூர் சந்தையில் விற்பதற்காக சட்டவிரோத கும்பல்களிடமிருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் தயாரிப்புகள் உட்பட 402 வகையான பதிவுச் செய்யப்படாத மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில், பாலியல் தூண்டுதல் மாத்திரைகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள்,
கருத்தடை மாத்திரைகளும் அடங்கும்.
ஆனால் யாரும் கைதுச் செய்யப்படவில்லை.
பதிவுச் செய்யப்படாத மருந்துகளை விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் 1984-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் ஒரு குற்றமாகும்.
1952-ஆம் ஆண்டு மருந்து விற்பனைச் சட்டத்தின் கீழும் இது தண்டனைக்குரியது என அமைச்சு நினைவுறுத்தியது.



