
மூவார், டிச 19 – மூவார் ,தாமான் பாகோ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சமையல் எரிவாயு வெடித்ததில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
இரவு 8 மணியளவில் நடந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 51 வயது ஆடவர் சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரி நோர் அல்பத்தா ஒமார் ( Nor Alfattah Omar ) தெரிவித்தார்.
இரவு மணி 8.54 அளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஏழு தீயைணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர் .
பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 30 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



