
கோலாலம்பூர், ஜூலை-14 – அதிக சோர்வின் காரணமாக நேற்று காலை தேசிய இருதயகக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் வீடு திரும்பியுள்ளார்.
காலை 10 மணிக்கு IJN-னில் அனுமதிக்கப்பட்ட 100 வயது மகாதீருக்கு சிறிய அளவிலான சிகிச்சை அளிக்கப்பட்டது; பிறகு, ஓய்வெடுத்து விட்டு, மாலை 5 மணிக்கு அவர் வீடு திரும்பினார்.
Kelab Che Det ஃபேஸ்புக் பக்கம் அத்தகவலை உறுதிப்படுத்தியது.
முன்னதாக புத்ராஜெயாவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ‘Picnic & Podluck’ நிகழ்வில் மகாதீர் பங்கேற்றார்.
சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு 100 வயது பூர்த்தியானதையும் அவரின் துணைவியார் துன் Dr சித்தி ஹஸ்மா மொஹமட் அலிக்கு 99 வயது பூர்த்தியானதையும் மக்களோடு கொண்டாடும் வகையில், புத்ராஜெயா ஏரியில் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வுக்கு சொந்தமாக காரோட்டி வந்த அப்பெருந்தலைவர், பின்னர் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் உடன்வர tandem முறையில் ஏரியை சுற்றி சைக்கிளோட்டினார்.
எனினும் சுமார் 8 முதல் 9 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளோட்டியப் பிறகு அவர் அதிகக் களைப்படைந்தார்.
சோர்வில் அவர் நாற்காலியில் சற்றே ஓய்வெடுத்து விட்டு, முன்கூட்டியே நிகழ்விலிருந்து IJN கிளம்பினார்.