
கோலாலம்பூர், டிச 15 – ஆஸ்திரேலியால் Bondi கடற்கரையில் நேற்று
நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மலேசிய பிரஜைகள் எவரும்
பாதிக்கப்படவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தொலைவில் இருக்கும்படி மலேசிய பிரஜைகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதோடு ஆகக்கடைசி நிலவரங்களை தொடர்ந்து அணுக்கமாக கண்கானித்துவரும்படி வலியுறுத்தப்படுவதாக ஆஸ்திரேலியாவிலுள்ள மலேசிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் மலேசியர்கள் மேல் நடவடிக்கைகளுக்கு உடனடியாக மலேசிய தூதரகத்திடம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேல் விவரங்கள் அல்லது தகவல்களுக்கு
கான்பெராவில் உள்ள மலேசிய தூதரகத்திடம் +61 0261 200 300 அல்லது +61 0416 334 901 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.



