
சிரம்பான், ஆகஸ்ட் 27 – 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 18 வயது ஆடவன், இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அக்குற்றவாளி அதனை எதிர்க்காமல் மாறாக ஒப்புக்கொண்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று சிரம்பானிலுள்ள தங்கும் விடுதியொன்றில் தனது 14 வயது காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சவுக்கடியும் விதிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்து வழக்கை வரும் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அந்நாளன்றே தண்டனையும் விதிக்க தீர்மானித்துள்ளது.