
சிரம்பான், ஜனவரி-16-சிரம்பான் டோல் சாவடியில் நேற்று பிற்பகலில் அமோனியா வாயு கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதியம் இரண்டு மணியளவில், 15 அமோனியா வாயு தோம்புகளை ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து அவ்வாயு கசிந்தது.
பின்னாலிருந்து ஏதோ வெடிப்புக் கேட்ட போது, டயர் தான் வெடித்து விட்டதாக லாரி ஓட்டுநர் முதலில் எண்ணியுள்ளார்.
எனினும் சிறிது நேரத்தில் கூர்மையான வாடை பரவ, அவ்வாடவர் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
அவருக்கு இலேசான கண் எரிச்சல் எற்பட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டன.
அம்மோனியா வாயு வாடை டோல் சாவடி பகுதியில் பரவியது.
இதனால், டோல் கட்டண வசூலிப்பாளரான ஒரு பெண்ணும் ஒரு பாதுகாவலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தீயணைப்பு – மீட்புப் படையினர் சம்பவ இடம் விரைந்து வாயுக் கசிவை கட்டுப்படுத்தி, அமோனியா வாயுவை பாதுகாப்பான தோம்புகளுக்கு மாற்றினர்.
முழு பரிசோதனைகளுக்குப் பிறகு அவ்விடம் பாதுகாப்பானது என்பதையும் உறுதிப்படுத்தினர்.



