
சாண்டியாகோ, ஆகஸ்ட் 12 – டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த, எலி அளவிலான சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை சிலி படகோனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
“யூத்தேரியம் பிரஸர்” எனப் பெயரிடப்பட்ட இந்த உயிரினம், 30 முதல் 40 கிராம் எடையுடையதாகவும், சுமார் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேல் கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது தென் அமெரிக்கா பகுதியில் கண்டறியப்பட்ட மிகச்சிறிய பாலூட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
புதைபடிவத்தில் ஒரு சிறிய தாடைத் துண்டு, இரண்டு கடைவாய்ப்பற்களின் கிரீடம் மற்றும் வேர்கள் அடங்கியிருந்தென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
முந்தைய காலத்தில் வாழ்ந்த டைனோசர்களைப் போலவே, இந்த சிறிய பாலூட்டியும் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக அறியப்படுகின்றது.