Latestமலேசியா

பிறந்த தேதியின் கணிப்பு எண் மூலம் 53 வயது ஆடவருக்கு டோட்டோவில் RM73 மில்லியன் பரிசுத் தொகை

கோலாலம்பூர், செப்டம்பர் 3 – தனது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதி எண்களை டோட்டோவில் 6/58 இல் கணித்து எழுதிய ஜோகூரைச் சேர்ந்த 53 வயதுடைய ஆடவர் ஒருவருக்கு 73.1 மில்லியன் ரிங்கிட் பரிசுப் பணம் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்துவரும் தொழிற்நுட்பாளரான அந்த ஆடவர் தாம் எழுதிய எண்களுக்கு பெரிய தொகை பரிசாக கிடைத்ததை நம்பமுடியாமல் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இரவு முழுவதிலும் தூங்காமல் இந்த பரிசு தொகை கிடைத்ததற்காக இறைவனுக்கு மனதார அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாக STM Lottery Sdn Bhd வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தது. டோட்டோ அதிஸ்டத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது வீட்டுக் கடனை முழுமையாக செலுத்தவிருப்பதோடு , இதர நிதி கடப்பாட்டை தீர்த்துவிட்டு தனது பிள்ளைகளுக்காக சேமித்து வைக்கப்போவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே தனது வயது, மனைவியின் வயது மற்றும் தங்களது வீட்டின் முகவரி எண்களை பயன்படுத்தி எழுதிய டிக்கெட்டிற்கு டோட்டோ 4/D ஜெக்போட் 1 இல் கடந்த மாதம் 10.7 மில்லியன் ரிங்கிட்டை ஜோகூரைச் சேர்ந்த மற்றொரு நபர் பரிசாக வென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!