Latestமலேசியா

செபராங் பிறையில் காரின் பின்னால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட நாய்; வைரலான வீடியோ

செபராங் பிறை, செப்டம்பர் -29 – பினாங்கு செபராங் பிறையில் சிவப்பு நிற சாகா காரின் பின்னால் நாய் ஒன்று கட்டி இழுத்துச் செல்லப்படும் காட்சி வைரலாகியுள்ளது.

Penang Hopes of Strays என்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்பொன்று, வீடியோவின் scrin shot படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியதை அடுத்து அச்சம்பவம் அம்பலமானது.

நல்லவேளையாக பினாங்கு SPCA எனப்படும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கான சங்கத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர், நாயைக் காப்பாற்றி விலங்குகள் கிளினிக்கில் சேர்த்தார்.

0.7 கிலோ மீட்டர் வரை தர தரவென இழுத்துச் செல்லப்பட்டதில் அந்நாயின் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் காயமடைந்து புண்ணாகிப் போயின.

அது குறித்து மாச்சாங் பூபோக் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

இவ்வேளையில் அந்நாயின் உரிமையாளரான ஆடவர், நாயை காரின் பின்னால் கட்டி தன் உறவினர் இழுத்துச் சென்ற சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றார்.

அந்நாய் தங்கள் குடும்பத்தின் செல்லப் பிள்ளை என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!