
புத்ராஜெயா, நவம்பர்- 10,
செப்டம்பர் மாதத்தில் மலேசியாவில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை முந்தைய மாதத்தை விட குறைந்த நிலையில் இருப்பதைத் தொடர்ந்து, தற்போது 5 லட்சத்து 18 ஆயிரத்து 600 பேராக மட்டுமே பதிவாகியுள்ளது.
வேலை இழப்பு விகிதம் 3 சதவீதமாக குறைந்துள்ளதால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 17.03 கோடி பேராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதில்74.9 சதவீதத்தினர் நிரந்தர ஊழியர்களாக இருப்பதோடு சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், நாட்டின் வேலை சந்தை நிலையாக இருந்து, வேலை வாய்ப்புகள் மெதுவாக அதிகரித்து வருவதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.



