
செமெஞ்ஞே, செப்டம்பர் 9 – நேற்று, செமெஞ்ஞே சுங்கை லுயி (Sungai Lui) சாலையோரத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்ட 45 வயதான மியான்மர் நாட்டு நபர் ஒருவர், ஆறு மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் கொண்ட குழு உடனடியாக விரைந்ததென்று சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) தெரிவித்தார்.
குழியில் விழுந்த அந்நபரை மீட்பு பணியாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் வெளியேற்றினர் என்றும் அவருக்கு பெருமளவில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.
மேலும் இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.