
கோலாலம்பூர், டிச 16- டிசம்பர் 8 ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் கூச்சாய் லாமாவில் நடந்த ஒரு விபத்தில் , 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம் அடைந்தது தொடர்பில் வைரலான வீடியோவை போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவத்தைக் காட்டும் டேஷ்போர்டு கேமரா வீடியோ டிக்டோக் தளத்தில் பரப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறைத் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஜம்சூரி முகமட் இசா (Mohd Zamzuri Mohd Isa) தெரிவித்தார்.
அதிகாலை 12.30 மணியளவில் ஹோண்டா RS150 மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், ஒரு வளைவில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீ பெட்டாலிங் திசையிலிருந்து வந்த 38 வயது நபர் ஓட்டிவந்த ஹோண்டா சிட்டி கார் மோதியதில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது . அந்த நபருக்கு தலையில் கடுமையாக காயம் ஏற்பட்டதால் கோலாலம்பூர் Chenselor Tuanku Muris
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் டிசம்பர் 9 ஆம்தேதி காலை மணி 7.11க்கு அவர் இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.



