
அமெரிக்கா, டிசம்பர் 3 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனை “Sleepy Joe” என விமர்சித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தனது ஒன்பதாவது அமைச்சரவை கூட்டத்தில் கண் மூடி தூங்கிய காட்சியி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
79 வயதான டிரம்ப், இரண்டு மணி நேர கூட்டத்தில், நீண்ட நேரம் எதுவும் பதிலளிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார்.
கூட்டத்தின் இறுதியில், அமைச்சர் ஒருவர் டிரம்பின் கொள்கைகளைப் பாராட்டி பேசும்போது, அவர் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்துள்ளார்.
உடல் நலத்தைப் பற்றி எழுந்த கேள்விகளுக்கு, வெள்ளை மாளிகை மருத்துவர், டிரம்ப்பின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதென்று தெரிவித்தார்.
இவ்வாறான பொது மேடையில் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் களைப்பு மிகுந்த களைப்புடன் காணப்படுவதால் அவரது உடல்நிலை பற்றிய விவாதங்கள் அதிகம் எழுந்து வருகின்றன.



