Latestமலேசியா

டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ண கபடி போட்டி; காப்பார் மெதடிஸ் பள்ளி வெற்றி 



கிள்ளான், ஜூலை 21 – கிள்ளான் மாவட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் காப்பார் மெதடிஸ் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்றதன் மூலம் டத்தோ M.ஜெயப்பிரகாஷ் சவால் கிண்ணத்தை வாகை சூடியது.

இப்போட்டியில் மகளிர் பிரிவில் நோர்த் ஹம்மோக் தோட்ட மாணவிகள் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.

இடைநிலைப் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் காப்பார் துங்கு இட்ரிஸ் இடைநிலைப் பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த வெற்றியாளராக சவால் கிண்ணத்தை வென்றது.

மேலும் இடைநிலைப் பள்ளி ஆண்கள் பிரிவில் கிள்ளான் ACS மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளராக வகை சூடி சவால் கிண்ணத்தை வென்றது.

கிள்ளான் மாவட்ட தமிழ்ப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான டத்தோ ஜெயப்பிரகாஷ் சவால் கிண்ண கபடிப் போட்டி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் அண்மையில் மூன்று நாள் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்ப் பள்ளிகள் பிரிவில் தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி, காப்பார் வலம்புரோசா தோட்ட தமிழ்ப் பள்ளி, எமரல்ட் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஹைலண்ஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, நோர்த் ஹம்மோக் தோட்ட தமிழ்ப் பள்ளி, சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி, காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப் பள்ளி, ஜாலான் அக்கோப் தோட்ட தமிழ்ப பள்ளி , பத்து அம்பாட் தமிழ்ப் பள்ளி , வாட்சன் தமிழ்ப்பள்ளி ஆகிய 11 தமிழ் பள்ளிகள் கலந்து கொண்டன.

இடைநிலைப் பள்ளிகள் பிரிவில் கிள்ளான் டத்தோ ஹம்சா, ரந்தாவ் பஞ்சாங், ராஜா மஹாடி, கிளாங் உத்தாமா, ஸ்டார் (STA) , ஏ.சி.எஸ் மெத்தடிஸ் , துங்கு இட்ரிஸ் ஷா ஆகிய ஏழு இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மற்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!