
கோலாலம்பூர், செப்டம்பர் 8- மாஜு ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டான் ஸ்ரீ அபு சாஹிட் முகமட் மீது 452 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி தொடர்பான 17 குற்றச்சாட்டுகள் இன்று நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
இந்த 17 குற்றச்சாட்டுகளும் மாஜூ ஹோல்டிங்ஸ் சார்பில் புத்ராஜெயாவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) நோக்கி திட்டமிட்ட விரைவுச்சாலை (MEX II) கட்டுமானத்துடன் தொடர்புடையவை என்று அறியப்படுகின்றது.
அவர் மாஜு ஹோல்டிங்ஸ் இயக்குநராக இருந்தபோது நிறுவன நிதிகளை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சாஹிட் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் மறுத்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சவுக்கடியும் மற்றும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சாஹிட்டுக்கு 1.5 மில்லியன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டார்.