
புது டெல்லி, நவம்பர்-11,
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 20 பேர் காயமடைந்துள்ளது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6.50 மணியளவில் டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலைய நுழைவாயிலில், மெதுவாக நகர்ந்து சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் நின்ற காரில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது.
அக்காரில் பயணிகள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
வெடிப்பில் பக்கத்திலிருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இதில் சிலரது உடல்கள் சாலையில் சிதறிகிடந்தன.
வெடிப்பு ஏற்பட்டதும் மக்கள் பதற்றத்தில் அலறியடித்து ஓடும் CCTV காட்சிகள் வைரலாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தீவிரவாதத் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்திலும் இந்திய தேசியப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக தமிழகம் உள்ளிட்ட முக்கிய மாநிங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



