
கோலாலம்பூர், டிச 17 – மலேசிய கால்பந்து சங்கமான (FAM) தகுதியற்ற விளையாட்டாளர்களை களமிறக்கியதாக அனைத்துலக காற்பந்து சங்கமான FIFA தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மூன்று அனைத்துலக ஆட்டங்களின் அனைத்துலக நட்புமுறை ஆட்டங்களில் மலேசியாவின் முடிவுகள் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அட்லான்டிக்கின் தீவு நாடான கேப் வெர்டே (Cape Verde ) , சிங்கப்பூர் மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிரான போட்டிகளில் மலேசியாவின் முடிவை பாதித்தது.
மே 29 ஆம் தேதியன்று செராஸில் கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கில் ஹரிமாவ் மலாயா அணி கேப் வெர்டேவுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலை கண்டது. செப்டம்பர் 4 ஆம் தேதியன்று புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூரை 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது.
செப்டம்பர் 8ஆம் தேதியன்று ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் புத்ரி சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பாலஸ்தீன குழுவை 1-0 என்ற கணக்கில் மலேசியா வீழ்த்தியது.
அந்த மூன்று ஆட்டங்களில் மலேசியா தோல்வி அடைந்தததாகவும் , அதன் முடிவுகள் 3 – 0 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி அடைந்ததாக டிசம்பர் 12 ஆம் தேதி கூடிய பிபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தீர்ப்பளித்தது.
அதோடு மலேசிய காற்பந்து சங்கத்திற்கு 10,000 சுவிஸ் பிராங் அல்லது 51,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளதாக மலேசிய காற்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.



