Latest

சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் அமாரின் இருதயம் 14 நிமிடம் செயல் இழந்தது

கோத்தா பாரு, செப் -30,

சுத்தியலால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த ஏழு வயது சிறுவன் முகமட் அமார் முகமட் பட்ருல் ஆறு நாட்களாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இன்று காலை 9.30 மணியளவில்
அவனது இருதயம் 14 நிமிடங்கள் செயல் இழந்தன. அவனுக்காக பிரார்த்தனை செய்யும்படி அவனது தாயார் நுர் அயுனி முகமட் ( Nur Ayuni Mohd ) பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

அச்சிறுவனை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிமாக போராடி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அச்சிறுவனின் மண்டை ஓட்டின் பல பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன, அத்துடன் மூளை வீங்கி காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனிடையே முகமட் அமாரை தாக்கிய சந்தேக நபர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தாய் மெலாவியில் இறந்த கிடந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!