
சென்னை, ஆகஸ்ட்-1- தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பணம் தேவைப்பட்டதால் முகமூடி அணிந்து கொள்ளையிட முயன்ற 4 மலேசியர்கள் கைதாகியுள்ளனர்.
திருவாரூரின் திருத்துறைப்பூண்டியில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி என்பரவது வீட்டில் தோட்ட வேலை பார்த்து, பின்னர் மலேசியாவுக்கு வந்து வேலை செய்தவர் குமார்; மலேசியாவில் இவருக்கு சரவணன், இளவரசன், கோபி, விமலன் ஆகிய உள்ளூர் ஆடவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 13-ஆம் தேதி தமிழக சுற்றுலா வந்த அந்த 5 பேருக்கும், கையிலிருந்த பணம் தீர்ந்ததால் செலவுக்கு யோசித்துள்ளனர்.
அப்போது, கார்த்தியின் வீட்டில் கொள்ளையிட குமார் திட்டம் தீட்டிக் கொடுக்க, ஐவரும் முகமூடி அணிந்து கொள்ளையிடச் சென்றனர்.
எனினும், அம்முயற்சி தோல்வியில் முடிந்து மூவர் சம்பவ இடத்திலேயே போலீஸாரிடம் சிக்கிக் கொள்ள, விமலன் திருச்சியில் கைதானார்.
திட்டம் தீட்டிக் கொடுத்துத் தலைமறைவாகியுள்ள குமாரைத் தமிழகப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.