
ஜோகூர் பாரு, அக் 21 – சிங்கப்பூரின் Bukom தீவில் எண்ணெய்க் குழாயில்
ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து, நேற்று முதல் குடியரசின் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டபோதிலும் , ஜோகூர் கடல் பகுதியில் எண்ணெய் கசிவின் விளைவுகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவரான ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் (Ling Tian Soon) தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர் கடற்பகுதியில் எண்ணெய்க் குழாய் கசிவு குறித்து தென் பிராந்திய கடல்சார் துறைக்கும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்கு முன், எண்ணெய் கசிவின் எந்த விளைவுகளையும் கண்டறிய ஜோகூர் கடல் பகுதியில் அந்த இரண்டு நிறுவனங்களும் தீவிரமாக ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன, என்று லிங் கூறினார். கடந்த சனிக்கிழமை முதல் குடியரசின் நீர் நிலைகள் சுற்றுப்புற தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகியிருப்பதாக சிங்கப்பூர் nst தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 5.5 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள புகோம் தீவில் உள்ள அனைத்துலக எண்ணெய் மற்றும் எரிவாயு (O&G) நிறுவனத்தின் குழாயில் கசிவு ஏற்பட்டது .புகோம் தீவில் எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் சிறப்பு இரசாயனங்கள் ஆகியவற்றிற்கான உற்பத்தி வசதிகளுடன் ஒருங்கிணைந்த எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தளம் உள்ளது. Pulau Bukom மற்றும் Bukom Kecil இடையே சர்வதேச O&G நிறுவனத்திற்குச் சொந்தமான கடலோரக் குழாயில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தது.