
ஈப்போ, ஆகஸ்ட்-9- ஈப்போ சிம்பாங் பூலாயில் தனியார் தென்னந்தோப்பை வங்காளதேசிகள் கும்பலொன்று விபச்சார விடுதியாக்கியதை, போலீஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
Kampung Kuala Tujuh-வில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், 2 பெண்கள் 4 ஆண்கள் அடங்கிய அக்கும்பல் கைதானது.
குற்றச்செயல் தடுப்புக்காக சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிம்பாங் பூலாய் போலீஸ், அந்தத் தென்னந்தோப்பில் தங்கும் வீட்டொன்றில் அக்கும்பல் விபச்சாரத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தது.
32 முதல் 49 வயது வரையிலான அந்த 6 பேரும் மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
பொது இடத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதோடு, முறையான பயணப் பத்திரத்தையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தோடு, குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடக்கிறது.