
தென் கொரியா, டிசம்பர் 18 – தென் கொரியாவில் முட்டை உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணைகளில், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பறவை காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza – HPAI) தொடர்பான இரண்டு புதிய வழக்குகள் நேற்று பதிவுச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தென் கொரியாவில் பதிவான மொத்த வழக்குகள் 14 ஆக உயர்ந்துள்ளன என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், அப்பண்ணையில் சுமார் நான்கு முறை பறவை காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாதிக்கப்பட்ட பண்ணைகளில் சிறப்பு தனிமைப்படுத்தல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நோய் மேலும் பரவாமல் தடுக்க, அந்தப் பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் மீது கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டின் இறுதிவரை, நாடு முழுவதும் உள்ள முட்டை உற்பத்தி கோழிப் பண்ணைகளில் முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.



