
தோக்யோ, ஜன 16 – Tokyo வில் ஏற்பட்ட ரயில் மின் தடை காரணமாக ஆயிரக்கணக்கானோரின் காலைப் பயணம் பாதிப்புக்கு உள்ளானது.
உலகின் மிகவும் பரபரப்பான சில ரயில் நிலையங்களைக் கொண்ட இரண்டு முக்கிய வழித்தடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
கிழக்கு ஜப்பான் ரயில்வேயின் யமனோட் (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin – Tohoku) ரயில் வழித்தடங்கள் அனைத்து திசைகளிலும் நிறுத்தப்பட்டன, ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான கால அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லையென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு பாதைகளும் நிறுத்தப்படும் தமாச்சி ( Tamachi ) ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் காலை 8.00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக NHK பொது ஒளிபரப்புக்கழகம் தெரிவித்தது.
தண்டவாளப் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்மரிலில் இருந்து தீப்பிழம்புகள் வந்து கொண்டிருந்த போதிலும் , தீ கிட்டத்தட்ட அணைந்துவிட்டது என்று NHK தெரிவித்துள்ளது.
நிலையங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் கெய்ஹின் ( Keihin – Tohoku ) ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் தண்டவாளங்களில் நடந்து செல்வதை காணமுடிந்தது.
யமனோட் வழித்தடம் தினமும் சுமார் 3.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஷின்ஜுகு ( Shinjuku ) உள்ளிட்ட நிலையங்கள் வழியாக செல்கிறது.



