Latestசினிமா

நடிகை சமந்தா– இயக்குனர் ராஜ் நிடிமோறு திருமணம்; நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு

கோவை, டிசம்பர்-1 – பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குனர் ராஜ் நிடிமோறுவை கரம்பிடித்துள்ளார்.

இன்று காலை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மைய லிங்க பைரவீ கோவிலில் எளிமையான அவர்களின் திருமணம் நடைபெற்றது.

சுமார் 30 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழா, ஆன்மீக சூழலில் நடைபெற்றது.

சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் “01.12.2025” என பதிவிட்டு, புகைப்படங்களோடு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இருவரும் முன்பு The Family Man Season 2 மற்றும் Citadel: Honey Bunny போன்ற தொடர்களில் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும், நாகார்ஜூனாவின் முன்னாள் மருமகளுமான சமந்தாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும்.

நாக சைதன்யாவுடன் விவாகரத்துப் பெற்ற பிறகு சினிமாவில் நடித்து வந்த சமந்தா மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைந்திருப்பதை சமூக ஊடகங்களில் இரசிகர்கள் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!