
ஷா ஆலாம், செப்டம்பர்-9 – உலகளாவிய வாழ்க்கைமுறைக்கு ஏற்ற காலணிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக விளங்கும் Skechers, the Comfort Technology Company™️, தனது எட்டாவது Skechers Friendship Walk நடவடிக்கையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி செத்தியா ஆலாம், செத்தியா சிட்டி (Setia City) மாநாட்டு மையத்தில் கோலாகலமாகக் நடத்தியது.
இதுவரை இல்லாத அளவுக்கு 8,000-க்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றதோடு 5 கிலோ மீட்டர் நடைப்பயணம் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம் என வந்திருந்தோரு உடற்பயிற்சியோடு நட்பையும் பாராட்டினர்.
10 கிலோ மீட்டர் போட்டி வெற்றியாளர்களுக்கு 1000 ரிங்கிட் ரொக்கப் பரிசு, பற்றுச் சீட்டு, மற்றும் skechers பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
அதோடு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அதிர்ஷ்டசாலி ஒருவர், வருடம் முழுவதும் RM6,000 மதிப்புள்ள skechers காலணிகளை இலவசமாக பெறும் வாய்ப்பையும் வென்றது வந்திருந்தோரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்க, NCSM எனப்படும் மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்திற்கு RM10,000 நிதியுதவியையும் skechers வழங்கியது.
Listerine, Lotus’s, OSIM, Plan B Physiotherapy, Polar Ice Cream ஆகியவை இந்நிகழ்ச்சிக்கான முதன்மை ஆதரவு நிறுவனங்களாக செயல்பட்டன.