
கோலாலம்பூர், செப்டம்பர் 8 – நாடு முழுவதும் பொது கழிப்பறைகள், பல்நோக்கு மண்டபங்கள் மற்றும் பொது பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 31 ஆம் வரை 281.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது.
உள்ளூர் அரசாங்கத் துறையின் மூலம், நாடு முழுவதுமுள்ள 156 உள்ளூர் அதிகாரிகளுக்கு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான திட்டங்களுக்கு அமைச்சு நிதியுதவி வழங்கியுள்ளது என்று அமைச்சர் ங்கா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்தார்.
திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மைச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில், மத்திய அரசு மூன்று சலுகை நிறுவனங்களை நியமித்துள்ள நிலையில் அவை பொது பூங்காக்கள் பராமரிப்பையும் மேற்கொள்கின்றன.
இந்நிலையில் இந்தச் சட்டத்தை ஏற்காத மாநிலங்களில் பொது பூங்காக்களின் பராமரிப்பு உள்ளூர் அதிகாரிகளின் பொறுப்பாகவே இருக்கும் என்று ங்கா கோர் கூறினார்.
மேலும் அமைச்சு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை வரவேற்கிறது என்றும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன்கள் மூலம் பொது பூங்காக்களில் தூய்மை நிலை மற்றும் சேதங்களை கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.