
நிபோங் தெபால், டிசம்பர்-31 – பினாங்கு, நிபோங் தெபாலில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த திடீர் வன்முறை தாக்குதல் உயிரிழப்பில் முடிந்துள்ளது.
நேற்று மாலை 4 மணி வாக்கில் முகமூடி அணிந்த சுமார் 15 மர்ம நபர்கள், கூர்மையான ஆயுதங்களுடன் நுழைந்து, உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த மூவரைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் படுகாயமடைந்த 59 வயது ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடந்ததும் அந்த இடமே கலவரமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
எனினும் தாக்குதல்காரர்கள் தப்பியோடி விட்டனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் அமைதிக் காக்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பான தகவல்கள் இருந்தால் போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



