
கோலாலம்பூர், நவம்பர்-9,
தனது நிர்வாண வீடியோ வைரலாக்கப்படுமென மிரட்டப்பட்டதால் பயந்துபோன ஓர் ஆடவர், RM9,000 பணத்தை பெண்ணொருவரிடம் பறிகொடுத்துள்ளார்.
அது குறித்து, 23 வயது அவ்விளைஞர் கடந்த புதன்கிழமை பத்து கேவ்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இருவருக்கும் நண்பர்களைத் தேடும் Tantan செயலி வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் WeChat வாயிலாக கைப்பேசி எண்களை மாற்றிக் கொண்டு இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வீடியோ அழைப்பில், அப்பெண்ணின் ஆசைக்கு ஏற்ப இருவருமே ஆடைகளைக் களைந்துள்ளனர்.
ஆனால், அதன் பிறகு பணம் தர வேண்டுமென்றும் இல்லையென்றால் நிர்வாண வீடியோவை வைரலாக்குவேன் என்றும் வாட்சப்பில் அப்பெண் மிரட்டல் விடுக்க, அவ்விளைஞர் கலங்கிபோனார்.
மானம் போய்விடுமே என பயந்து, அப்பெண் கொடுத்த பேங்க் நெகாரா அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் வங்கியொன்றின் கணக்குக்கு 2 தடவையாக அவ்வாடவர் RM 9,000 பணம் செலுத்தினார்.
இதையடுத்து, அந்த டிஜிட்டல் வங்கிக் கணக்கின் உரிமையாளரையும், பாதிக்கப்பட்ட நபரை தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்களையு அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீஸ் இறங்கியுள்ளது



