
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – பண்டிகைகள் நமக்குள் மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன.
அவற்றை கடைப்பிடித்து பல்லின கலாச்சாரத்தைப் போற்றுவோம் என, மலேசிய மலையாள அன்பர்களுக்கு வழங்கிய ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா தேசிய தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
ஓணம் பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது வாழ்வியலோடு கலந்த ஆழ்ந்த அர்த்தங்களை கொண்டது.
அதோடு நம் பண்பாடு, மரபு, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றின் பெருமையை வெளிப்படுத்தும் திருநாள்.
வீட்டைச் சுத்தம் செய்வது, எண்ணெய் தேய்த்து குளிப்பது, புத்தாடை அணிவது, பெரியோரை வணங்குவது, ஆலயத்திற்கு செல்வது போன்ற ஒவ்வொரு செயலும் நம் பண்பாட்டின் அடையாளம்.
எனவே ஆண்டுக்கு ஒருமுறை தானே என்றில்லாமல், சிக்கனமாகச் செலவிட்டு, அனைவரும் இணைந்து “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்தோடு இன்றையை ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவோம் என்றார் அவர்.