
பங்சார், மே-8- கோலாலம்பூரில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் பெய்த அடைமழையில், பங்சார், ஜாலான் பெனாகாவில் 2 வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தன.
தகவல் கிடைத்து பந்தாய் தீயணைப்பு & மீட்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
இரு வீடுகளுக்கு முன் நிகழ்ந்த அச்சம்பத்தில் எவரும் காயமடையவில்லை.
எனினும், மரங்கள் சாய்ந்து விழுந்ததில், ஒரு Perodua Myvi-யும் Mitsubishi Triton-னும் சேதமுற்றன.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லின் பணியாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்டுத்தினர்.
மாலை மணி 4.40 அளவில் துப்புரவுப் பணிகள் முழுமைப் பெற்றதாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் சொன்னர்