Latestமலேசியா

சுகாதார அமைச்சின் சுமார் 90% ஆம்புலன்ஸ் வண்டிகள் 6 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை; மேலவையில் தகவல்

கோலாலாம்பூர், செப்டம்பர்-3- சுகாதார அமைச்சு purpose-built அதாவது நோக்கத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Toyota HiMedic, Demers Ambulance அல்லது Medix போன்ற அம்புலன்ஸ் வண்டிகளை இதுவரை வெளிநாடுகளிலிருந்து வாங்கியதில்லை.

மாறாக, கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து அம்புலன்ஸ் வாகனங்களுமே, சாதாரண வேன்களிலிருந்து மாற்றியமைக்கப்பட்டவை தான் என, மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணார்ச்சலம் கேட்ட கேள்விக்கு துணையமைச்சர் Dato Lukanisman Awang Sauni பதிலளித்தார்.

சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அங்கீகரித்த வாகனப் பட்டறைகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களால் சாதாரண வேன்கள் அம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றப்படுகின்றன.

பயனீட்டாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் அவை பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய, PUSPAKOM மற்றும் பொதுப் பணித் துறையான JKR-ரின் விரிவாக தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு விடப்படுகின்றன.

அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவை பயன்பாட்டுக்கு வருவதாக துணை அமைச்சர் சொன்னார்.

பயணிகள் மற்றும் சரக்கு வேன்கள் அம்புலன்ஸ் வண்டிகளாக மாற்றியமைக்கப்படும் போது, அவற்றின் பாதுகாப்பு அம்சங்களுக்கு உத்தரவாதம் உண்டா என, முன்னதாக Dr லிங்கேஷ்வரன் கேட்டிருந்தார்.

KKM-முக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகளில் 1773 வண்டிகள் அல்லது சுமார் 90 விழுக்காடு 6 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும்; இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை புதிதாக 920 அம்புலன்ஸ் வண்டிகளை கொள்முதல் செய்து, தேவை முன்னுரிமை வாரியாக 6 மண்டலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் சொன்னார்.

Purpose-built அம்புலன்ஸ் வண்டிகளைப் பெறுவது குத்தகையாளர்களின் கையிருப்பையும் பொறுத்தது; என்றாலும், இவ்விஷயத்தில் அனைத்து வழிவகைகளையும் கண்டறிந்து வருவதாக துணையமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!