
கோலாலம்பூர், ஜூலை-22- யாரோ பறக்க விட்ட பட்டத்தின் நூல் MRR2 நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்து, மோட்டார் சைக்கிளோட்டியின் கழுத்தை பதம் பார்த்த சம்பவத்தை, போலீஸ் விசாரித்து வருகிறது.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் தலைவர் Mohd Zamzuri Mohd Isa அதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், சாலையின் நடுப்பாதையில் போய்கொண்டிருந்த 27 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் உடலில், எங்கிருந்தோ வந்து விழுந்த பட்டத்தின் நூல் பட்டு விட்டது.
பிறகு அவரின் கழுத்திலும் பட்டு, நூல் அறுப்பட்டது. நல்ல வேளையாக நிலைத்தடுமாறி அவர் சாலையில் விழவில்லை.
எனினும் கழுத்தில் எரிச்சல் ஏற்பட்டதால் உடனடியாக சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி கழுத்தை பரிசோதித்தவர், பின்னர் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றார்.
இச்சம்பவத்தின் வீடியோ முன்னதாக வைரலானதும் குறிப்பிடத்தக்கது.