
ஜோகூர் பாரு, டிசம்பர்-9 – ஜோகூர் பாருவில் BSI எனப்படும் சுல்தான் இஸ்கண்டார் சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் பணியாற்றி வரும் 32 வயது அமுலாக்க அதிகாரி ஒருவர், ‘பறக்கும் கடப்பிதழ்’ மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனையில், விதிமுறைகளை மீறி இரண்டு கைப்பேசிகள் வைத்திருந்ததால் அவர் பிடிபட்டார்.
பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் நடத்தப்பட்ட சோதனையில் 8 வெளிநாட்டு கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் 6 சீன நாட்டு கடப்பிதழ்கள்; ஒன்று இந்தோனேசியா, மற்றொன்று வியட்நாம் கடப்பிதழாகும்.
இந்த ‘பறக்கும் கடப்பிதழ்’ மோசடியானது, ஒருவர் நேரடியாக வராமல் குடிநுழைவுச் சோதனைகளைத் தவிர்க்க உதவுவதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர் 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; விசாரணைக்காகக் மோட்டார் சைக்கிள், கைப்பேசிகள் மற்றும் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



