
ஷா ஆலாம், டிசம்பர்-20 – சிலாங்கூர், பாத்தாங் காலியில் ஒரு கார் உரிமையாளர், சிறிது நேரம் கடைக்குச் செல்வதற்காக, இயந்திரத்தை நிறுத்தாமல் சென்றது அவருக்கு பாதகமாய் முடிந்துள்ளது.
அதனைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு திருடன், காரை திருடிச் சென்று விட்டான்.
Proton Inspira காரோடு, உள்ளே இருந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் திருடன் வசம் சென்று விட்டதால் 26 வயது ஓட்டுநர் மனமுடைந்தார்.
எனினும் சற்று ஆறுதலாக, அந்த நாய் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் பின்னர்
பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
திருடு போன காரையும் சந்தேக நபரையும் போலீஸ் தேடி வருகிறது



