Latestமலேசியா

ஜோகூர் பாரு மாநகர் மன்ற இழுவை லோரிக்கு தீவைத்த ஆடவனுக்கு 5 ஆண்டு சிறை RM6,000 அபராதம்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 20 – ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்கு தீவைத்த துரோகச் செயலை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றம் 6,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் பாரு , Waterfront என்னுமிடத்தில் வாகனங்களை வைக்கும் மாநகர் மன்றத்தின் கிடங்கில் லோரிக்கு தீவைத்ததால் 24,000 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டை முகமட் நஸ்ருல் என்ற அந்த நபர் ஒப்புக் கொண்டான்.

பணம் இல்லை என்பதால் கோபம் அடைந்து அந்த செயலை செய்ததாக 31 வயதுடைய அந்த ஆடவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான். தனது கார் இழுத்துச் செல்லப்பட்டதால் அதற்காக விதிக்கப்பட்ட 500 ரிங்கிட் அபராத தொகையை 250 ரிங்கிட்டாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரிகள் அதனை மறுத்ததால் அந்த நேரத்தில் தம்மிடம் 200 ரிங்கிட் கூட இல்லாததால் ஆத்திரம் அடைந்து அந்த லோரிக்கு தீவைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தல்ஹா பாச்சோக்கிடம் தெரிவித்தார்.

அந்த ஆடவருக்கு பணம் இல்லாத சூழ்நிலை இருந்தாலும் பொது இடத்தில் மாநகர் மன்றத்திற்கு சொந்தமான இழுவை லோரிக்கு தீவைப்பதை ஏற்க முடியாது என்பதால் சிறை மற்றும் அபராதத்தை விதிப்பதாகவும் , 6,000 ரிங்கிட் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் நான்கு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!