
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 6 – இன்று காலை பினாங்கு பாலத்தில், மைவி வாகனமொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட அந்தக் கார் 90 சதவீதம் சேதமடைந்துள்ள நிலையில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு இயந்திரங்களுடன் விரைந்தனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் ஃபாகுன் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட நேரத்தில் தீ அணைக்கப்பட்டது என்றும் அறியப்படுகின்றது.
பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், விபத்திற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டறிந்து வருகின்றனர்.