
செபு, நவம்பர் 22-பிலிப்பின்ஸில் ‘Haven’ என்ற நாய் எமனையே ஏமாற்றிய கதையாக சூறாவளியிலிருந்து தப்பி நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.
நவம்பர் 4-ஆம் தேதி 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ‘கால்மீகி’ சூறாவளியில் மத்திய பிலிப்பின்ஸ் நகரான செபுவில் (Chebu) நூற்றுக்கணக்கான வீடுகள் சிதைந்து, நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
அதில் ‘Haven’-னும் காணாமல் போனதாக நினைத்து அதன் உரிமையாளர் மனதைத் தேற்றிக் கொண்டார்.
இந்நிலையில், 2 வாரங்கள் கழித்து, பேரிடர் சேதம் குறித்து உரிமையாளர் தொலைக்காட்சி செய்திக்கு வீட்டிலிருந்து பேட்டி கொடுத்துகொண்டிருந்த போது, ‘Haven’ திரும்பி வந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தான்.
மண் மூடிய உடம்புடன், மெலிந்த நிலையில் இருந்த நாயை, உரிமையாளர் வாரி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இந்த அதிசய சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரழிவிலும் நம்பிக்கையை மீட்ட Haven என அந்நாயை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.



