Latestமலேசியா

புக்கிட் பாங்கோங் பகுதியில் புலி நடமாட்டம்; பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன

தாப்பா, டிசம்பர்-9 – பேராக், புக்கிட் பாங்கோங் பொழுதுபோக்கு பகுதியில், புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் அது முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், சட்டவிரோத வேட்டைக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கிலும் போலீஸ் அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புலி இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அது வேட்டைக்காரர்களை ஈர்க்கக்கூடும் எனவும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் புலி தாக்கியதால் 2 மாடுகள் கொல்லப்பட்டு 5 மாடுகள் காணாமல் போயின.

எனினும், மனிதர்கள் அல்லது கால்நடைகள் மீது புதியத் தாக்குதல் எதுவும் பதிவாகவில்லை என பேராக் போலீஸ் கூறியது.

என்றாலும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதோடு, வலைகள் மற்றும் ஈர்ப்புப் பொருட்கள் வைத்து புலியைப் பிடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

எனவே, தற்போதைக்கு பொது மக்கள் அந்தப் பகுதியை நெருங்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!