Latestமலேசியா

புதிய மின்சார கட்டண அமலாக்கம்; 85 சதவீத மக்கள் பாதிக்கப்படவில்லை – துணைப் பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 23 – தீபகற்ப மலேசியாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வந்த புதிய மின்சார கட்டண அட்டவணையால் 85 சதவீத மக்கள் பாதிக்கப்படவில்லையென்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிப்படைந்த 15 சதவீத மக்களின் மின்சார கட்டணங்களைச் சரி செய்யும் நடவடிக்கைக்களை மட்டுமே அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகளைக் கொடுப்பதுதான் அரசாங்கத்தின் அணுகுமுறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையின் இயக்கச் செலவுகள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பதிவு செய்த 1.44 பில்லியன் டாலர் லாபத்தை அதிகரிக்கும் என்ற மலேசிய தரவு மைய சங்கத்தின் கூற்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!