
ஷா ஆலம், ஜூலை 28 – கடந்த வாரம் ஆடவர் ஒருவரைக் கடத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களும் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளனர்.
21 வயது இளைஞரை கடத்தியதற்காகவும் அவரை அடித்து வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது கூட்டு குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது,
தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இவ்விரு குற்றங்களும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு 5,000 ரிங்கிட் மற்றும் 2,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை வழங்கி, இவ்வழக்கை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.