
ஷா ஆலம், டிசம்பர் 10 – பூனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நேப்பாள ஆடவனுக்கு நீதிமன்றம் 40,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
விதிக்கப்பட்ட அந்த அபராதத்தைக் குற்றவாளி நீதிமன்றத்தில் செலுத்த தவறினால், 15 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம் 15 ஆம் தேதியன்று, ‘Kota Kemuning, Seksyen’ 31-இல் உள்ள குடியிருப்பு பகுதியின் நான்காவது தளத்தில் அந்த ஆடவன் அக்குற்றத்தைப் புரிந்துள்ளான்.
இதனை நேரில் கண்ணுற்ற நபர் அருகில் சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட அந்த நேப்பாள ஆடவன் நிர்வாணமாக இருந்த நிலையில், உடனடியாக தனது உடையை அணிந்து கொண்டு பின்னர் பூனைையை கீழே தூக்கி எறிந்து விட்டான்.
இவையனைத்தும் காணொளியில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சரியான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கிய குற்றத்திற்காக குற்றவாளி தற்போது நான்கு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றான்.



