
லண்டன், அக்டோபர்-7,
அழகு, கலாச்சாரம், மற்றும் சக்திவாய்ந்த பெண்களைக் கொண்டாடும் விதமாக லண்டனில் கடந்த வாரம் Miss and Mrs Tamil (UK & Europe) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
செப்டம்பர் 27-ஆம் தேதி லண்டன் ஹில்டன் மெட்ரோபோல் ஹோட்டலில், தமிழ்ச் சமூகத்தின் திறமைகளை வெளிப்படுத்தும் அற்புத மேடையாக அது அமைந்தது.
பிரபல தொழில் முனைவரும் இப்போட்டியின் நிறுவனருமான சாய், இந்நிகழ்வை தயாரித்து இயக்கியிருந்தார்.
இது வெறும் அழகிப் போட்டி அல்ல – தமிழரின் மரபு, திறமை, மற்றும் பெண்மையின் வலிமையை கொண்டாடும் மேடை என அவர் வருணித்தார்.
மூத்த நடிகை ராதிகா சரத்குமார், துஷாரா விஜயன், மற்றும் புகழ் பெற்ற ராப் இசைப் பாடகர் வாஹீசன் ரசையா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
600-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில், நீண்ட காலத்திற்கு பேசப்படும் ஒரு தமிழ் விழாவாகவும் இது அமைந்தது.
இதில் Mrs Tamil 2025 பட்டத்தை லாவண்யா முத்துலிங்கம் வென்றார்;
Miss Tamil 2025 பட்டம் ப்ரெனுஜா பன்னீர்செல்வத்திற்கு சென்றது.
தமிழகம் மற்றும் இலங்கையில் பெண்களுக்கு உதவும் “தமிழச்சி” என்ற புதிய அறக்கட்டளையை அறிவித்ததுடன், இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கான அவசர உதவி எண் ஒன்றையும் தொடங்கியதன் மூலம், இவ்விழா சமூகப் பொறுப்பையும் முன்னிறுத்தியது.
டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாகவும் பிரபலங்களின் பங்கேற்பு மற்றும் பெருமைமிக்க தருணங்களுடனும் இந்த Mrs & Miss Tamil (UK & Europe) போட்டி முத்திரைப் பதித்தது