
குளுவாங், ஜூலை 18 – குளுவாங் 4ஆவது மைலில் உள்ள ஒரு பேரங்காடிக்கு முன் அநாகரிகமாக நடந்துகொண்ட ஒருவர் அது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் பஹ்ரின் முகமது நோ (Bahrin Mohd Noh ) தெரிவித்தார்.
இந்த வீடியோ பதிவு நேற்று முதல் முகநூலில் வைரலாகி வருவதோடு , இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.நேற்று மாலை 4.22 மணிக்கு உள்நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து நேற்று அல்லது புதன்கிழமை மாலை மணி 4.16 அளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது.
அதே நாளில் மாலை 5 மணியளவில் Jalan Besar Mersing கில் சந்தேக நபரை குளுவாங் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 5 போலீஸ்காரர்களைக் கொண்ட குழுவினர் கைது செய்தனர். சோதனையின் முடிவுகளில் சந்தேக நபருக்கு இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் குற்றவியல் சட்டத்தின் 377 D பிரிவின் கீழ் இன் கீழ் விசாரிக்கப்படுவதோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும் விசாரணையில் தலையிடக்கூடிய எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை பஹ்ரின் கேட்டுக் கொண்டார்.