
கோலாலம்பூர், ஜனவரி-15, – “தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழரின் பழமொழி இன்றும் உயிர்ப்புடன் ஒலிக்கிறது.
மலேசியா உட்பட உலகம் முழுவதும் தமிழர்கள் தைப்பொங்கல் என்ற அறுவடை நன்றி விழாவை இன்று கொண்டாடுகின்றனர்.
இது வெறும் பண்டிகை அல்ல; மழை, நிலம், விதை, உழவன்—இவை ஒன்றிணைந்து தரும் அறுவடைக்கு நன்றி செலுத்தும் நாள்.
4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், ஒவ்வொரு நாளும் தனித்துவமான வாழ்வியல் தத்துவத்தை எடுத்துரைக்கிறது:
போகி பழையன கழிக்கும் நாள், சூரிய பொங்கல் வாழ்வின் மூலாதாரமான சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் நாள், மாட்டுப் பொங்கல் உழைப்பில் பங்கெடுக்கும் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நாள், காணும் பொங்கல் உறவுகளை புதுப்பிக்கும் நாள்…
தமிழர் திருநாளாயினும்… இன, மத, மொழி எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் சமூக ஒற்றுமையின் அடையாளமே பொங்கல்.
இன்று பொங்கும் பானையில் நெல்லரிசி மட்டுமல்ல, மகிழ்ச்சியும் வளமும் பொங்கட்டும்…
தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம் மலேசியாவின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!



