
போர்ட் கிள்ளான், நவம்பர் 5 – போர்ட் கிள்ளான், கே.எல். சென்ட்ரல் (KL Sentral) மற்றும் தஞ்சோங் மாலிம் (Tanjung Malim) இடையிலான கே.டி.எம். கோம்யூட்டர் (KTMB) ரயில் சேவை இன்று காலை 6 மணி முதல் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை ஏற்பட்ட மேல்தள மின்கம்பி பிரச்சனையால், சுபாங் ஜெயா, பத்து தீகா , ஷா ஆலாம் மற்றும் பாடாங் ஜாவா ஆகிய நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, பழுதுபார்க்கும் பணிகள் நேற்று இரவு 11.10 மணிக்கு முடிவுற்றதாக KTMB தெரிவித்துள்ளது.
சேவை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் பஸ் சேவை மூலம் உதவிபெற்றனர்.
பயணிகளின் பொறுமைக்கு நன்றி தெரிவித்ததுடன், சேவையின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.



