
போர்டிக்சன், நவம்பர் 22-போர்டிக்சன், சிலியாவ், சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.
தனியார் நிறுவன அதிகாரி கே. மதன் குமார் மற்றும் முதன்மை ஆலோசகர் எம். கனகசிங்கம் முயற்சியில், பள்ளித் தலைமையாசிரியர் ஆர். தமிழ்ச்செல்வி முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இருவரும் நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
பாதுகாப்புடன் நடக்காவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்; அதுவே சுகாதாரத்துடன் இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு நோயில் விழ வேண்டியிருக்கும் என மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் செயல்முறை மற்றும் காணொலி விளக்கங்களும் வழங்கப்பட்டன.
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் அறிவும், பாதுகாப்பும் சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



