
லா பெஸ், டிச 9 – பொலிவியாவில் லா பெஸ் வட்டாரத்தில் சிறு பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் எண்மர் மாண்டதோடு மேலும் அறுவர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று வயது பெண் குழந்தையும் அடங்கும் என அறிவிக்கப்பட்டது. கடுமையான மழை மற்றும் பனிக் கட்டிகளால் சாலை மூடப்பட்ட நிலையில் இருந்ததால் அந்த பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக தீயணைப்புத்துறையின் இயக்குநர் பெவல் டோவர் ( Pavel Tovar ) தெரிவித்தார்.
கொக்கோ இலைகளையும் ஏற்றிச் சென்ற அந்த பஸ் சாலையிலிருந்து திடீரென சறுக்கி, பின்னர் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றுப் படுகைக்குள் விழுந்தது. விபத்தில் காயம் அடைந்தவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்பதற்கு தீயணைப்பு வீரர்களும் தன்னார்வலர்களும் பல மணி நேரம் எடுத்துக் கொண்டனர்.



