
மலாக்கா, நவம்பர் 22-மலாக்கா, தாமான் மாலிம் ஜெயாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த வினோத சம்பவத்தில்,
உடம்புபிடி நாற்காலியில் நாய் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து காலை 8.18 மணிக்கு, மலாக்கா தெங்கா தீயணைப்பு நிலையத்திலிருந்து 6 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
நாய், நாற்காலியின் அடிப்பகுதியில் உள்ள இயந்திரக் கருவிகளுக்குள் சிக்கி தவித்தது.
தீயணைப்பு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் நாற்காலியைப் பிரித்து, நாயை பாதுகாப்பாக மீட்டனர்.
நாய்க்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
நாய் மீட்கப்படும் போது, உள்ளே வலியால் அவதிப்பட்டாலும் அது அமைதியாக தீயணைப்பு வீரர்களுடன் ‘ஒத்துழைத்த’ காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.



