
மலாக்கா, செப்டம்பர்-1 – நேற்று மலாக்கா நீரிணையில் வலுவற்ற நில நடுக்கம் உலுக்கியதை, மலேசியா வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia உறுதிப்படுத்தியது.
எனினும், ஜோகூர் பத்து பஹாட்டின் செமேராவில் (Semerah) பிற்பகல் 1.57 மணியளவில் ஏற்பட்ட அந்நில நடுக்கத்தின் அதிர்வு தரையில் உணரப்படவில்லை.
கடல் பகுதியிலேயே ரிக்டர் அளவைக் கருவியில் 2.9-தாக நில நடுக்கம் ஏற்பட்டதாக, MET Malaysia தலைமை இயக்குநர்Hisham Mohd Anip கூறினார்.
ஏற்கனவே செகாமாட், யொங் பெங் ஆகியவை பாதிக்கப்பட்ட நிலையில் இது ஒன்றரை வாரங்களில் ஜோகூரில் பதிவாகியுள்ள ஏழாவது நில நடுக்கமாகும்.