Latestமலேசியா

மலேசிய இந்து சங்கத் தேர்தல்: தங்க கணேசன் மீண்டும் தலைவராக தேர்வு

கோலாலம்பூர், ஜூலை 21- கடுமையாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற மலேசிய இந்து சங்க தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனது தலைவர் பதவியை தற்காத்துக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தலில் தங்க கணேசன் அணியில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் உட்பட 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவராக பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு உதவித் தலைவர் பதவிக்கு முதலாவது உதவித் தலைவராக முன்னாள் தலைவர் மோகன் ஷான் மற்றும் இரண்டாவது உதவித் தலைவராக முன்னாள் பொதுச் செயலாளரான விநாயக மூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்து சங்கத்தின் 48ஆம் ஆண்டுக்கூட்டத்தோடு மலேசிய இந்த சங்கத்தை நிர்வகிக்கும் 27 பேர் கொண்ட மத்திய செயலவைக்கான 10 இடங்களுக்கான
தேர்தலும் நேற்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது.

இம்முறை இந்த தேர்தலில் தங்க கணேசன் தலைமையிலான ஒரு அணியும் , துணைத்தலைவராக இருந்த கணேஷ் பாபு தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிட்டனர்.

அதில் தங்க கணேசன் 1,102 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார். கணேஸ் பாபு அணியில் கணேஷ் பாபுவுடன் டாக்டர் முரளி ஆகியேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

தங்க கணேசன் அணியில் போட்டியிட்ட கோபி அர்ச்சுணணுக்கு 1,091 வாக்குகளும், சுஜித்ராவுக்கு 1,064 வாக்குகளும், அரிதாசனுக்கு 1,064 வாக்குகளும், சதிஸ்ஸிற்கு 1,041 வாக்குகளும் , ஏராவிற்கு 1,034 வாக்குகளும் , டாக்டர் முரளிதரனுக்கு 1,031 வாக்குகளும், கே.தினகரனுக்கு 1,031 வாக்குகளும், கணேஸ் பாபுவிற்கு 1,028 வாக்குகளும், டத்தோ மோகன் ஷானுகு 1,023 வாக்குகளும் கிடைத்தன.

மேலும் பொதுச் செயலாளராக Karunamurthi , துணைச் செயலாளராக அழகேந்திரன், பொருளாளராக இரா பெருமாள், துணை பொருளாளராக Vijay Baskar ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!